“உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லை”.. திடீரென கைவிட்ட காதலன்… இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்…!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி, இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். பெற்றோருடன் வசித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் நான் இவரை தான் காதலிக்கிறேன், எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டுள்ளார். பெற்றோர் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர் . பின்பு வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் செல்வதற்காக இரயில் நிலையத்திற்கு ஷ்ரத்தா சென்றுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு செல்போனில் காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். காதலன் போனை எடுக்கவில்லை.

சில மணி நேரம் கழித்து காதலன் காதலிக்கு போன் செய்து எனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று கூறியுள்ளார். பிறகு போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ந்து போன காதலியே நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டே அழுதுள்ளார். என்ன பண்ணுவது என்றுத் தெரியாமல் குழம்பி போயிருந்த சமயத்தில் ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் ஏறி அமர்ந்துள்ளார். பின்பு  ஷ்ரத்தா கல்லூரி நண்பரான கரண் என்பவர் அதே பெட்டியில் இருந்து உள்ளார். கரண் ஏன் அழுது கொண்டிருக்கிறாய் எப்படி இருக்கிறாய், என்ன ஆச்சு என்று நலம் விசாரித்தார். பின்னர் ஷ்ரத்தா அவருடைய நிலைமையை கூறினார்.

   

ஸ்ரத்தாவின் நிலைமையை புரிந்து கொண்டு கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். பின்பு ஷ்ரத்தாவும் ஒப்புக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்து ஷ்ரத்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். போலீஸ் ஷ்ரத்தாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

   

ஷ்ரத்தாவின் தந்தை, இருவரும் பத்து நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும். என்னுடைய மகள் என் வீட்டிலும் அவர் அவருடைய வீட்டிலும் இருந்து பத்து நாட்களுக்குப் பிறகும் விரும்பினால் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். புதுமண தம்பதிகள் இருவரும் சம்மதித்த அவரவர் வீட்டிற்கு சென்றனர். சினிமாவை மிஞ்சிய இத்திருமணம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.