16 ஆண்டுகள் ஜெயில்தண்டனை… இதுக்கு யார் பதில் சொல்வாங்க… விடுதலையானவரின் கல்லறையில் குடும்பத்தினர் உருக்கம்…!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த இரயில் குண்டு வெடிப்பில் 209 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கமல் அகமது அன்சாரி உள்ளிட்ட ஐந்து பேருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது, மற்றும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை. கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையிலேயே கமல் முகமது அன்சாரி உயிரிழந்தார். சமீபத்தில் கமல் முகமது அன்சாரி உள்ளிட்ட 12 பேரையும் கோர்ட் விடுதலை செய்தது. கமல் முகமது அன்சாரி கல்லறைக்குச் சென்று அவருடைய குடும்பத்தினர் கண்ணீருடன் விடுதலை செய்யப்பட்ட நகலை கல்லறைக்கு முன்பு வாசித்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் அப்துல் வாகித் சேக் யிடம் கேட்டபோது எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும்  16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளித்த கோர்ட். அவர் 16 ஆண்டுகளாக ஜெயிலில் அனுபவித்த கஷ்ட, நஷ்டங்கள் அனைத்தையும் மற்றும் அனாதையாக ஜெயிலில் இருந்ததற்கோ. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பல மாற்றத்தின் காரணத்திற்கு யார் பதில் கூறுவார் என்று உருக்கமாக கேள்வியை எழுப்பி உள்ளார். கமல் முகமது அன்சாரி பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்தவர்.