#BREAKING: 100% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதே இலக்கு -முதலமைச்சர் ஸ்டாலின்…!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

பள்ளிக்கல்விக்கென்று தனியாக மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநிலத்திற்கென்று கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையானது 2022 ஜூலை 1-ம் தேதியானது சமர்ப்பிக்கப்பட்டது. 14 பேர் கொண்ட குழு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வி சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75 சதவீதமாக உள்ளது. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வில் சேர வேண்டும் என்பதே இலக்கு. சமத்துவ கல்வி உருவாக்குவோம். அறிவு கல்வி அறிமுகம் செய்வோம். பாகுபாட்டை நீக்குவோம்” என்று கூறியுள்ளார்.