ஆந்திரப் பிரதேச மாநிலம் பிலேருவில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று (ஜூலை 16) ஒரு நெஞ்சை உலுக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றின் அடியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த 17 வயது சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாலை 3:15 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொடூர விபத்து, அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/Deadlykalesh/status/2077774361063506136/photo/1
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா அல்லது கூட்ட நெரிசலால் சிறுமி நிலைதடுமாறி விழுந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் இந்தத் தகவல் பரவி, லட்சக்கணக்கானோரின் கவனத்தைப் பெற்று வரும் நிலையில், இப்பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
