“இது என்ன விசித்தர நோய்யா?”… அரைகுறை ஆடையுடன் ரகளை செய்த வெளிநாட்டு நபர்…போலீசாரையே அலறவிட்ட சைக்கோ… கையை கடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி… நள்ளிரவு பயங்கரம்…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

வாரணாசியின் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்தசாகர் மருந்து சந்தை பகுதியில், அரைகுறை ஆடையுடன் வெளிநாட்டு நபர் ஒருவர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததோடு, தடுக்க முயன்ற உள்ளூர்வாசிகளைத் தாக்கியும் உள்ளார். இந்த மோதலின் போது அவர் ஒரு குடியிருப்பாளரின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரையும் மதிக்காமல் அவர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதை அடுத்து, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

https://www.instagram.com/reel/Da1ydZmx_5E/?utm_source=ig_embed&ig_rid=AgToohNc3UwTVq-Y6LzASmA

   

கைது செய்யப்பட்ட அந்த வெளிநாட்டு நபர், தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக கபீர்சௌரா பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் ‘பாங்’ எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சில தகவல்கள் கூறினாலும், காவல்துறையினர் தரப்பில் இதுவரை அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது இந்த விசித்திரமான மற்றும் ஆக்ரோஷமான நடத்தைக்கு மனநல பாதிப்பு காரணமா அல்லது போதைப்பொருள் அதிகளவு உட்கொண்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது அடையாளம் மற்றும் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரங்களைச் சேகரித்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.