பீகாரின் பாட்னா நகரிலிருந்து வீட்டை எதிர்த்துத் தன் காதலனுடன் ஓடிவந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், ஆரம்பத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதாக உணர்கிறாள். சில நாட்களிலேயே, சமூக வலைத்தளங்களில் தன்னை ஒரு மனைவியாக அடையாளம் காட்டி, அதன மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறாள். ஆனால், இந்த வெற்றியே அவளது வாழ்க்கையில் புயலை வீசுகிறது. “மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்கிறான்” எனச் சுற்றியுள்ள மனிதர்கள் கணவனை எள்ளி நகையாட, அது அவனுள் தாழ்வுமனப்பான்மையையும் வெறுப்பையும் விதைக்கிறது. விளைவு—மனைவி மீது தொடர் அடக்குமுறைகளும் உடல் ரீதியான தாக்குதல்களும் அதிகரிக்கின்றன. பெற்றோர் வீட்டைத் துறந்து வந்த அவளுக்கு வேறு புகலிடமும் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களாக உணவும் நீருமின்றி அழுகையிலேயே நாட்களைக் கடத்துகிறாள்.
இந்த இக்கட்டான சூழ்நிலை மாமியாருக்குத் தெரியவரும்போது, அவர் தன் கோபத்தையோ அதிகாரத்தையோ காட்டாமல் அன்பையே ஆயுதமாக்குகிறார். மகன் மற்றும் மருமகளை அழைத்துப் பொறுமையுடன் பேசும் அவர், “ஊர் வாயை மூட முடியாது; உலகம் பேசிக்கொண்டுதான் இருக்கும். உங்கள் மகிழ்ச்சி எதில் இருக்கிறதோ அதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். ஒருநாள் இதே உலகம் உங்களைப் பாராட்டும்” என ஆறுதல் கூறுகிறார். மாமியார் கூறிய அந்த ஒற்றை வார்த்தை, புயலில் தவித்த அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும் புது நம்பிக்கையையும் பாய்ச்சுகிறது. அனுபவமிக்க மூத்தவர்கள் வீட்டில் இருந்தால், உடைந்து போகும் குடும்ப உறவுகளைக் கூட ஒரு நொடியில் ஒட்டவைத்துச் சீராக்கிவிட முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…