சட்ட ஒழுங்கு எங்கே போனது..? பணம் தர முடியாது என உணவகத்தை.. போர்க்களமாக மாற்றிய கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பனாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திகிராம் பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சத்னா தாபா உணவகத்திற்கு ராஜ் யாதவ், ஜீத் ரைக்வார் மற்றும் சில இளைஞர்கள் நள்ளிரவில் சாப்பிடச் சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பின் பணத்தைச் செலுத்தாமல் அவர்கள் புறப்பட முயன்றபோது, உணவகத்தின் உரிமையாளர் அவர்களிடம் சாப்பாட்டு பில்லைக் கேட்டுள்ளார்.

பில் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், உணவக உரிமையாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், தடியடி மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் வந்த அந்த கும்பல் உணவகத்திற்குள் புகுந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த வன்முறையில் உணவக ஊழியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு, அங்கிருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், “மீண்டும் பில் கேட்டால் கொலை செய்துவிடுவோம்” மிரட்டல் விடுத்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.

   

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் முழுவதும் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பனாகர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோசல்பூர் பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.