பஸ் ஸ்டாண்டில் களேபரம்…! ரத்த வெள்ளத்தில் துடித்த கண்டக்டர்… டிரைவரின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!

By Devi Ramu on தை 11, 2026

Spread the love

திருச்சி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண மோதல் கொலையில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால்குடியைச் சேர்ந்த நடத்துநர் பிரதாப்பும், காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மூக்கனும் நெருங்கிய நண்பர்கள். சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுபானக் கடையில் இருவரும் மது அருந்தியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும், பேருந்து நிலையத்திற்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான மோதல் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஓட்டுநர் மூக்கன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதாப்பின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பியோடிய மூக்கனை அதிரடியாகக் கைது செய்தனர். பலியான பிரதாப்புக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.