அதிர்ச்சி..! “திருமதி செல்வம்” சீரியல் நடிகர் கோல்டன் சுரேஷ் காலமானார்… சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்..!!

By Soundarya on தை 11, 2026

Spread the love
பாப்புலர் சீரியலான ‘திருமதி செல்வம்’ தொடரில் ‘சேட்டு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் கோல்டன் சுரேஷ் (53), நேற்று காலை காலமானார். அவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் உடல் இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த கோல்டன் சுரேஷின் ஆன்மா சாந்தியடைய சின்னத்திரை கலைஞர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.