“ச்சீ.. சிறுவனின் வாயில்..” போதை தலைக்கேறிய காவலரின் வெறிச்செயல்.. சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. அசோக் நகரில் அரங்கேறிய பயங்கரம்..!!!

By Muthu Mani on வைகாசி 29, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்வதற்காகக் கடந்த மே 25-ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளான். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்த அச்சிறுவன், மறுநாள் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளான். பின்னர், மாமா வீட்டில் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வருவதாகக் கூறியதால், அவனது பெற்றோர் சிறுவனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டுத் தங்களது சொந்த ஊரான நாகர்கோவில் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவனது மாமா தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில் மாமா அங்கேயே தூங்கிவிட, அவரது நண்பர் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி, மீதமிருந்த மதுவை அவனது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார். அதோடு மட்டுமன்றி, சிறுவனின் வாயில் தனது ஆண் உறுப்பு வைத்து பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், செய்வதறியாது அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபரின் முகத்தில் அடித்துவிட்டு, கூச்சலிட்டபடியே வீட்டின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

   

நேராக அருகில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று சிறுவன் நடந்தவற்றை புகாராக அளித்தான். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவனின் மாமா மற்றும் அவனது நண்பரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் 35 வயதுடைய வேலப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அசோக் நகர் போலீசார் காவலர் வேலப்பன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்குத் துணையாக இருந்த சிறுவனின் மாமாவையும் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.