தமிழகத்தில் முதல்முறையாக பள்ளிக் கல்வித் துறையில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாட புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. உடற்கல்வியை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல் முனைவர் பொ. சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்பு குழு வைத்துள்ளது.
இந்தப் பாடநூல் திட்டத்தில் ஆசிரியர்கள் பல உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வி அறிவு, விளையாட்டு கல்வி, பாதுகாப்பு கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும். உடர்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்க திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடர்பான கருத்துக்களை புரிந்து கொள்வதையும் குறிக்கின்றது. ஏற்கனவே மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விளையாட்டு பாட வேலையை ஆசிரியர்கள் கடன் வாங்க கூடாது என அரசு கண்டிப்புடன் சொல்லியுள்ள நிலையில் இனி பாடப் புத்தகமும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
