தமிழ் சினிமாவில் முதல் முதலாக காமெடி ட்ராக் இணைத்து வெளியான படம் எது தெரியுமா?

By vinoth on ஐப்பசி 11, 2024

Spread the love

இந்திய சினிமாவிற்கு வயது 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மௌனப் பட காலத்தில் இருந்து இந்தியாவில் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. மௌனப் படக் காலத்தில் இருந்து இந்திய சினிமாவுக்குக் கச்சா பொருளாக இருந்தது புராணக் கதைகள்தான். தொடர்ந்து புராணக் கதைகளைதான் படமாக்கினார்கள்.

அதனால் காட்சி ரீதியாகக் கதையை சொல்லவேண்டிய அவசியம் இயக்குனர்களுக்கு ஏற்படவில்லை. அதனால் காட்சிகளை வசன ரீதியாக சொல்ல ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் புராணக் கதைகள் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கின.

   

#image_title

   

அதனால் சமூக படங்களை எடுக்க சில இயக்குனர்கள் முயன்றனர். ஆனால் புராண படங்களுக்கு இடையில் ஒரு காமெடி ட்ராக்கை இணைத்து கதையை கலகலப்பாக்கினர். இதனால் காமெடி ட்ராக் என்ற ஒன்று உருவாகி தற்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வருகிறது.

 

இந்த காமெடி டிராக்கைப் பயன்படுத்திதான் தமிழ் சினிமாவில் சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, விவேக் மற்றும் வடிவேலு போன்ற லெஜண்ட்கள் உருவாகினர். ஆனால் இந்த ட்ராக் என்பது கதையின் போக்கை குறுக்கிடும் ஒன்றாக அமைந்துவிட்டது. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக இந்த ட்ராக் எனும் பின்னொட்டு இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் இப்படி தமிழ் சினிமாவில் முதல் முதலாக இப்படி ட்ராக்கை எந்த படத்தில் இணைத்தார்கள் என்பது பற்றி பார்ப்போம். கருட கர்வபங்கம் என்ற படத்தில்தான் இந்த புதுமை புகுத்தப் பட்டது. இந்த படத்தை விளம்பரப் படுத்தும் போதே புராண காமெடி தமிழ்ப் படம் என்றே விளம்பரப் படுத்தியுள்ளார்கள்.ஓரியண்டல் பிலிம்ஸ் சார்பாக இந்த படத்தை இயக்கியிருந்தார் ஆர் பத்மநாதன். இந்த படம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டில் ரிலீஸானது.