இந்திய தொழில் சாம்ராஜ்யத்தின் மையத்தில் பல தலைமுறைகளாக இருந்து வரும் குடும்பம் டாடா குடும்பம். அந்த குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு 86 வயது ஆகிறது. டாடா குடும்பத்தின் அடையாளங்களில் ஒருவரான ஜாம்ஷெட்ஷியின் கொள்ளுப் பேரனான ரத்தன், அமெரிக்காவில் படிப்பை முடித்து டாடா குழுமத்தில் இணைந்தார்.
நஷ்டத்தில் இயங்கிய ரேடியோ நிறுவனத்தின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை லாபத்துக்கு கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர் டாட்டா குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ரத்தன் டாடா, குழுமத்தின் தலைவராக 1991 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். 2012 ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்த அவர் அதன் பின்னர் பதவி விலகி, டாடா அறக்கட்டளையின் தலைவராக மட்டும் இருந்தார்.

#image_title
கடைசி வரை திருமணமே செய்துகொள்ளாத ரத்தன் அது குறித்து பேசும்போது “நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு சென்றேன். ஆனால் எனது பாட்டியின் உடல்நலம் மோசமானதால் இந்தியாவுக்கு வந்துவிட்டேன். எனது காதலியும் இந்தியாவுக்கு வந்துவிடுவார் என நம்பினேன். ஆனால் 1962 ஆம் ஆண்டு சீன இந்திய போர் நடந்தது. இதனால் காதலின் பெற்றோர் அவரை இந்தியா அனுப்ப சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்த உறவு அப்படியே முடிந்தது. நான்கு முறை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தேன். ஆனாலும் என்னால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை” எனக் கூறியிருந்தார்.
தன் வாழ்நாளில் உப்பு முதல் தங்கம் வரை அனைத்து தொழில்களையும் செய்தார் ரத்தன். அதே போல சினிமாவிலும் 2004 ஆம் ஆண்டு கால்பதித்தார். அவருடைய நண்பரான அமிதாப் பச்சன் நடிப்பில் ஏட்பார் என்ற படத்தை 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார். அந்த படம் ப்ளாப் ஆன நிலையில் அவர் அதன் பிறகு சினிமா பக்கமே தலைகாட்டவில்லை.
