பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி பாலசுப்ரமணியம் சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக இயற்கை என்னும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி என்ற பாடலை பாடினார். இதுதான் அவரது குரலில் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல்.
ஆனால் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் முதலில் ரிலீசானது அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல். எஸ்.பி பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல் வேறு. திரையில் வெளியான பாடல் வேறு. 1000 படகர்கள் வந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் திரையுலகில் அவருக்கு என ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
