அமெரிக்கா VS சீனா “மோதினால் உலகம் இருக்காது!”.. அமெரிக்காவுக்குச் சீன அதிபர் கொடுத்த இறுதி எச்சரிக்கை.. பதறும் உலக நாடுகள்…!!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருபெரும் உலகத் தலைவர்களும் பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ வளாகத்தில் இன்று சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்க வணிகத் தலைவர்களிடம் பேசிய ஷி ஜின்பிங், வெளி உலகிற்கான சீனாவின் கதவுகள் மேலும் விரிவாகத் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்காவிற்கு நான்கு முக்கிய “சிவப்பு கோடுகளை” நிபந்தனைகளாக விதித்தார். அதன்படி, தைவான் விவகாரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், சீனாவின் அரசியல் அமைப்பு மற்றும் சீனாவின் வளர்ச்சி உரிமை ஆகிய நான்கு விஷயங்களில் அமெரிக்கா சவால் விடக்கூடாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். வல்லரசுகளுக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ‘துசிடிடிஸ் பொறி’ (Thucydides Trap) விதியை மேற்கோள் காட்டி, இரு நாடுகளும் மோதிக்கொண்டால் உலகம் சீரழிந்துவிடும் என்று எச்சரித்தார்.

வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையில், சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 60% இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்தார். அதன்படி, அமெரிக்க விவசாயிகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றைச் சீனா பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற டிரம்பின் நிபந்தனைக்கு ஷி ஜின்பிங் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், ரஷ்யாவிற்கு ராணுவ உதிரிப்பாகங்களை அனுப்புவதையும், அவர்களுக்கு உதவுவதையும் சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவை விரும்பும் விதமாகச் சில சுமூகமான உரையாடல்களும் இடம்பெற்றன. வரவிருக்கும் அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டிரம்பிற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே, இந்த இரண்டு உலகத் தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Muthu Mani

Recent Posts

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

2 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

9 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

16 minutes ago

டீக்கடை பெஞ்ச் டூ சோசியல் மீடியா..! ஸ்டாலினின் டிஜிட்டல் புரட்சி.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில்…

19 minutes ago

டிடிவி தினகரனுக்கு அடுத்த ஷாக்..! செய்தித் தொடர்பாளர் அபுதாஹிர் திடீர் ராஜினாமா.. பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின்…

22 minutes ago

பகீர் சம்பவம்.. டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..! ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நாடே அதிர்ச்சியில் …!!

டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும்…

25 minutes ago