Actor Abishan Jeevin

வித் லவ் படத்தை கண்டுகொள்ளாத கிராமப்புற சினிமா ரசிகர்கள் – இப்படியும் ஒரு காரணமா? படக்குழுவினருக்கு ஏற்பட்ட ஷாக்!

By Elango on மாசி 7, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக நடிகராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்தாண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்ல வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் வித் லவ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியான வித் லவ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் வசூலும் இல்லை. வித் லவ் என்ற ஆங்கில டைட்டிலை பார்த்து பலரும் இந்த படத்தை புறக்கணிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரை அப்செட் செய்துள்ளது.