“வாங்கி கொஞ்ச நாள் தான் ஆகுது…” 7 பவுன் தாலி செயினை பறிகொடுத்து கண்ணீர் விட்டு அழுத சப்-இன்ஸ்பெக்டர்…! யாரு பார்த்த வேலை இது…?

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தனது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்துள்ளார். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டப் பெயர் மாற்றம் மற்றும் நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக நடந்த இந்தப் பேரணியில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், சப்-இன்ஸ்பெக்டர் அம்ருதாவின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியை நைசாகத் திருடிச் சென்றுள்ளார். சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது நகையைத் தொலைத்ததை அறிந்த அந்த அதிகாரி, சம்பவ இடத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

   

சமீபத்தில் தான் அவர் அந்தச் சங்கிலியை வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துணிகரத் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவமொக்கா போலீசார், போராட்டக் களத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணிக்கு வந்த பெண் அதிகாரியின் நகை திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.