தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்ற இளைஞர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அனுஷா (20) என்ற இளம் பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர் சம்மதத்தோடு கடந்த மார்ச் 12ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திருமணமான மூன்றாவது மாதத்தில் இருந்து கூடுதல் வரதட்சணையாக பணம் மற்றும் நகை கேட்டு அனுஷாவை பரமேஸ் தொல்லை செய்து வந்துள்ளார்.

அனுஷாவை நேற்று பரமேஷ் மீண்டும் தாக்கிய நிலையில் இது பற்றி அறிந்த அனுஷாவின் தாயார் தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருமகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமியாரிடம் பேசி சமாதானப்படுத்தி அனுஷாவை தனது வீட்டுக்கு பரமேஷ் அழைத்து வந்துள்ளார். சாய்புரி கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்ற போது அனுஷாவுடன் பரமேஷ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த பரமேஷ் வீட்டின் அருகே இருந்த உருட்டு கட்டையால் காதல் மனைவியை கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை தேடி வரும் நிலையில் அனுஷாவை பரமேஷ் கட்டையால் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sensitive Content
సీసీ ఫుటేజ్.. ప్రేమించి పెళ్లాడిన యువతిని కిరాతకంగా కొట్టి చంపిన భర్త
తాండూరులోని సాయాపూర్లో జరిగిన ఈ ఘటనతో గ్రామంలో విషాదఛాయలు..
కట్నం తేవాలని దూషిస్తూ, కర్రతో విచక్షణారహితంగా కొట్టడంతో అపస్మారక స్థితిలోకి వెళ్లిన అనూష.. చికిత్స మృతి
యువకుడి… https://t.co/ujX5RCu0jI pic.twitter.com/gnlmskOTnv
— Telugu Scribe (@TeluguScribe) December 19, 2025
