75 வயது முதியவர் ஒருவரும், அவரது 40 வயது மகனும் வீட்டில் அமர்ந்திருந்தபோது, ஜன்னலில் வந்து அமர்ந்த ஒரு காகம், அவர்களின் உறவின் ஆழத்தை உணர்த்தும் ஒரு பாடமாக மாறியது. தந்தை “இது என்ன?” என்று கேட்டபோது, மகன் “இது காகம்” என்று பதிலளித்தான். ஆனால், தந்தை மீண்டும் மீண்டும் அதே கேள்வியை நான்கு முறை கேட்டபோது, மகன் பொறுமை இழந்து ஆத்திரத்துடன் கத்தினான். ஒரே கேள்வியை ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள் என்று எரிச்சலடைந்த மகனின் செயல், அந்த முதிய தந்தையை மௌனமாக்கியது.
தனது அறையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து வந்த தந்தை, அதில் ஒரு பக்கத்தை மகனைப் படிக்கச் சொன்னார். அதில், “இன்று எனது 3 வயது மகன் என்னிடம் ஒரு காகத்தைப் பார்த்து 23 முறை ‘இது என்ன?’ என்று கேட்டான்; நான் ஒவ்வொரு முறையும் சலிக்காமல் அன்போடு பதிலளித்தேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்ததும் மகனின் கண்கள் கலங்கின. தான் குழந்தையாக இருந்தபோது தந்தை காட்டிய பொறுமையையும், இப்போது தான் காட்டிய அவசரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் வெட்கித் தலைகுனிந்தான்.
இந்தச் சம்பவம் இன்றைய தலைமுறைக்கு ஒரு மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது. நாம் குழந்தையாக இருந்தபோது நமது பெற்றோர்கள் நமது ஒவ்வொரு சிறு கேள்வியையும், குறும்புத்தனத்தையும் அளவற்ற பொறுமையுடனும் அன்புடனும் கையாண்டார்கள். இன்று அதே பெற்றோர்கள் முதுமையின் காரணமாகச் சற்றுத் தளர்ந்து, மீண்டும் குழந்தைகளாக மாறும்போது, அவர்களுக்கு நாம் தர வேண்டியதெல்லாம் சிறு ‘பொறுமை’ (Patience) மட்டுமே. பெற்றோரின் அன்பு சுயநலமற்றது; அவர்களைக் கடைசி வரை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துவதே ஒரு பிள்ளையின் ஆகச்சிறந்த கடமையாகும்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…