“குழந்தை பிறந்தாச்சு, பேர் வச்சாச்சு”… நடிகர் விஜய்க்கு பவர் ஸ்டார் கொடுத்த ஓப்பன் சேலஞ்ச்… ஆரம்பத்திலேயே தடாலடி சவால்….!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய பிரதான கூட்டணிகள் ஒருபுறம் வியூகங்களை வகுக்க, மறுபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘AVK’ (அண்ணா வளர்ச்சி கழகம்) என்ற புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் தனக்குத்தான் போட்டி என்று சவால் விடுத்துள்ள பவர் ஸ்டார், “அவர் TVK என்றால் நான் AVK” என அதிரடியாகப் பேசியுள்ளார். திரைத்துறையில் அண்ணன் தம்பிகளாக இருந்தாலும், அரசியலில் விஜய்யை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்சிப் பெயரை அறிவித்த கையோடு, விரைவில் இதற்கான பதிவுப் பணிகளை தேர்தல் ஆணையத்தில் மேற்கொள்ள இருப்பதாகவும், தேர்தல் வியூகங்களை வகுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் பா.ஜ.க, த.மா.கா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இயங்கிய பவர் ஸ்டார் சீனிவாசன், சில வாரங்களுக்கு முன்பு வரை தி.மு.க-விற்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்தார். தற்போதும் தனது புதிய கட்சி அறிவிப்புக்கு நடுவே, “தி.மு.க ஆட்சியில் மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்; அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான்” எனக் கூறி தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்வது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளைக் கடந்தவர் பவர் ஸ்டார். தற்போது விஜய்யின் தவெக-விற்கு எதிராக இவர் குதித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. தனது கட்சியின் பலத்தை அடுத்த தேர்தலில் நிரூபிப்போம் என்று அவர் சூளுரைத்துள்ள நிலையில், இது விஜய்யின் அரசியல் வருகைக்கு எதிரான ஒரு கிண்டலா அல்லது உண்மையான அரசியல் நகர்வா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்…. தவிக்கும் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…

1 second ago

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

52 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago