‘மெழுகு டாலு நீ’ உருகும் ரசிகர்கள்….செம அழகான புகைப்படங்களை வெளியிட்ட  நடிகை நஸ்ரியா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….

By Begam on புரட்டாதி 26, 2022

Spread the love

நடிகை நஸ்ரியா ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2006ல் வெளியான  ‘பளிங்கு’ மலையாள திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை நஸ்ரியா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013இல் ஹீரோயினாக அறிமுகமானார். நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்கள் இவரை தமிழில் முன்னணி நடிகையாக்கியது. 2014 வெளியான பெங்களூர் நாட்கள், திருமணம் என்கிற நிக்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

   

   

இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவ,ர் மலையாளம் மற்றும் தெலுங்கில் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு ‘அடடே சுந்தரா’ என்ற படத்தின் மூலம் சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்பொழுது போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ‘மெழுகு டாலு நீ’ என வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…..