தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கும் பிரபல நடிகர்.. சரி வருமா..?

By Begam on கார்த்திகை 1, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் திரையுலகில் ”மெரினா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் எண்ணற்ற திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

actor Sivakarthikeyan

   

இவரது படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் கூறிய குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

 

ஒரு சிலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் இதுபற்றி தற்பொழுது வரை வாய் திறக்காமலே இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்பொழுது ஒரு சூப்பரான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படவுள்ளது.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்னும் குக்கிராமத்தில் பிறந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குனர் அருண் காமராஜ் இயக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.