முருகா நீ இங்கேயே வந்து விட்டாயா .? படுக்கையறையில் கிடந்த நாகப்பாம்பு… பரவசத்தில் வழிபட்ட குடும்பம்…!!!

By Soundarya on ஆவணி 14, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் ஆல் பேட்டை கூட்டுறவு நகரில் வசித்து வருபவர் கடல் நாகராஜன். இவர் சம்பவத்தன்று  குடும்பத்தோடு படுக்கையறைக்கு தூக்க சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மெத்தைக் கட்டிலில்  நாகப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடையாமல் அந்த  குடும்பத்தினர் பரவசமடைந்து சாமி கும்பிட்டுள்ளார்கள். மேலும் வீட்டில் இருந்த பெண் ஒருவர் பாம்பை பார்த்து, “வந்து விட்டாயா முருகா..? இன்று உனக்கு பூஜை செய்தோம் நீ எங்களுடைய வீட்டுக்கு வந்து விட்டாய் “என்று கூறியபடி கையெடுத்து கும்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு வீரர் வீட்டின் படுக்கை அறையில் கிடந்த நாகப்பாம்புவை லாபமாக பிடித்து வெள்ளி கடற்கரையில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.