வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு.. இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க போகுது… தமிழகத்திற்கு வந்த அலர்ட்…!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

வங்க கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஆகஸ்ட் 19 வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அதனால் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியேறுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தென் மாவட்ட கடலோர பகுதிகள், இதற்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.