விஜய்க்கு ஏன் இன்னும் அழைப்பு விடுக்கப்படல…? இதுதான் காரணம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது… தவெகவுக்கு செக் வைத்த ஆளுநர்..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,  இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும், விஜய்க்கு உடனடியாக அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது என்று அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், தங்களுக்குப் போதுமான பலம் (ஆதரவு) இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உறுதிப்படுத்தாத பட்சத்தில், ஆளுநர் தனது முடிவை எடுப்பதற்கான அதிகாரத்தை வைத்துள்ளார். விஜய்யின் கட்சிக்கு இன்னும் பெரும்பான்மை பலம் குறித்த தெளிவான ஆவணங்கள் தேவைப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

   

இறுதியாக, ஆளுநரின் இந்த முடிவை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ன் படி அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது என்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, ஆளுநர் தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.