4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி… அண்ணியாருக்கே ஷாக் கொடுத்த நிர்வாகிகள்… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 10, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டணி குறித்த தெளிவான முடிவு இன்னும் எட்டப்படாததால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் நேரங்களில் திருவிழா கோலம் பூண்டிருக்கும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம், தற்போது ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை அறிவித்திருந்தது. ஆனால், நான்காவது நாளான நேற்று (பிப்ரவரி 9) விருப்ப மனுக்களை வாங்குவதற்கு ஒரு நிர்வாகிகள் கூட வராதது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தொண்டர்கள் எழுச்சியுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவும் இந்த மந்தநிலை கட்சியின் எதிர்காலத் திட்டமிடலில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.