டாக்ஸியில் ஏறிய பயணி ஒருவர், ஓட்டுநரின் அனுமதியின்றி கார் உள்ளேயே சிகரெட் பற்றவைத்ததால், கோபமடைந்த ஓட்டுநர் அவருக்கு சவாரி வழங்க மறுத்து காரில் இருந்து இறக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், பயணி சிகரெட் பிடித்ததும் ஓட்டுநர் காரை உடனடியாக நிறுத்துகிறார். “என் கார் ஒன்றும் உங்கள் வேலைக்காரன் அல்ல” என்று ஆவேசமாகக் கூறும் ஓட்டுநர், புகைபிடிப்பதை தன் காரில் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து, பயணியை கீழே இறங்குமாறு கூறுகிறார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலான நெட்டிசன்கள் ஓட்டுநரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகனங்களில் மற்றவர்களின் ஆரோக்கியத்தையும், வாகனத்தின் தூய்மையையும் மதித்து புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…