“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..!” கம்பத்தில் தொங்கியபடி இளைஞர் கதறிய மரண ஓலம்…. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ….!

Spread the love

பெல்லாரி அருகே உள்ள சங்கனகல்லு கிராமத்தில், மின் கம்பத்தில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹுலகப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்படாமல் கம்பத்திலேயே தொங்கியுள்ளார். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அவர் உயிருக்குப் போராடியபடி மரண ஓலமிட்டதை அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடனும் பீதியுடனும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

முதற்கட்ட விசாரணையின்படி, தினக்கூலி அடிப்படையில் இப்பணியில் அமர்த்தப்பட்ட ஹுலகப்பா, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மின் கம்பத்தில் ஏறியதாகத் தெரிகிறது. மேலும், பழுதுபார்க்கும் பணி தொடங்குவதற்கு முன்பாக மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்றும், இந்த அலட்சியமே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது. இக்கோர விபத்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருவதோடு, பார்ப்போரின் நெஞ்சைக் பதறவைப்பதாக உள்ளது.

https://twitter.com/HateDetectors/status/2075207089685774448/video/1

இந்தத் துயரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரப் பராமரிப்புப் பணிகளின் போது பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குல்பர்கா மின்சார விநியோக நிறுவன (GESCOM) அதிகாரிகள் மற்றும் உள்ளூர் லைன்மேனின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஹுலகப்பாவின் குடும்பத்தினரின் கதறல் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

4 மணத்தியாலங்கள் ago