போடு ரகிட ரகிட..! தவெக-வின் தேர்தல் சின்னம்… விஜய் போடும் பக்கா பிளான்…!!

By Soundarya on தை 11, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் தேர்தல் சின்னத்தை ஒரு பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் செய்யத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். இந்தியத் தேர்தல் ஆணையம், தவெக-விற்கு மோதிரம், விசில் அல்லது வெற்றிக் கோப்பை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கச் சேலம் அல்லது தருமபுரி மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, அங்கு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் ஆலோசித்து வருகிறார்.

ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, மண்டல வாரியாகப் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், சின்னம் அறிமுக விழாவே அடுத்தகட்ட பாய்ச்சலாக அமையும் எனத் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.