SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! ஜனவரி 15-க்குள் இதை செய்யத் தவறினால் கணக்கு முடங்கும்… அவசர எச்சரிக்கை…!!

By Soundarya on தை 11, 2026

Spread the love

பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 2026, ஜனவரி 15-ம் தேதிக்குள் தங்களது KYC (Know Your Customer) விவரங்களைக் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் (RBI) பாதுகாப்பு விதிமுறைகளின்படி, நீண்ட காலமாகப் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளைப் பாதுகாக்கவும், முறையற்றப் பயன்பாட்டைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விவரங்களை வழங்காத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பணப் பரிமாற்றம் மற்றும் இதர வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என வங்கி எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ கிளைக்குச் சென்றோ அல்லது ஆன்லைன் வழியாகவோ இந்த விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.