“அண்ணனைத் தேடி வந்தோம், தம்பியைப் பலி வாங்கியோம்”… தீபாவளி இரவில் வியாசர்பாடியை உலுக்கிய கொடூரக் கொலை….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

சென்னை வியாசர்பாடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தீபாவளி பண்டிகை தினத்தன்று நடந்த பயங்கர கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த சிலம்பரசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி இரவு சூர்யா மற்றும் அவரது தந்தை உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனைத் தேடிச் சென்றுள்ளனர்.

சிலம்பரசனைத் கொலை செய்யும் நோக்கில் அக்கும்பல் தாக்க முயன்றபோது, அவர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அங்கிருந்த சிலம்பரசினின் 18 வயது தம்பி தனுஷை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சூர்யா மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 5 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.