வரலாற்று மாற்றம்..! பட்டியலினத்தவர்கள் கையில் தமிழக கல்வித்துறை… CM விஜய் செய்த அதிரடி மாற்றம்..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கல்வி கற்கவே பெரிதும் போராடிய ஒரு சமூகத்தின் கைகளில் ஒட்டுமொத்த மாநிலத்தின் கல்வித்துறைகளும் சென்றிருப்பதை அரசியல் விமர்சகர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகப் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெ.விஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இதுபோன்றதொரு சமூக நீதி நகர்வு இதுவரை நிகழ்ந்ததில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழக அமைச்சரவை வரலாற்றில் இது மிகவும் முக்கியமானதொரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.