திமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசத்துடன் பயணித்து வந்த திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.செல்வராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுக்கட்சியிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கே தற்போது கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தங்களைப் போன்ற சீனியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மிகுந்த வருத்தத்துடன் அவர் தனது விலகல் முடிவை வெளியிட்டுள்ளார்.
தற்போதைக்கு தனக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ள போதிலும், கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய மூத்த நிர்வாகி ஒருவரின் இந்த திடீர் விலகல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அரசியல் களத்தில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
