இயக்குநருக்கே தெரியாமல் படத்தை எடிட் செய்த சூர்யா.. அதனால் தான் அந்த படம் ஓடலாய..?

By admin on கார்த்திகை 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவில், மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக பாராட்டப்பட்டவர் கே.வி ஆனந்த். இயக்குநராகவும் அவர் சில படங்களை இயக்கினார். அவர் அயன், மாற்றான், கனா கண்டேன், கோ, அனேகன், காப்பான், கவண் ஆகிய படங்களை இயக்கினார். இதில் அயன் படம், சூர்யாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் மாற்றான் படம், பிளாப் ஆனது, கோ, கனா கண்டேன் போன்ற மற்ற சில படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. சில படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றன. தமிழ், இந்தி, தெலுங்கு என பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் கே.வி ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Surya

   

கடந்த 2021ல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கே.வி ஆனந்த் இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது மகள் திருமண விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. தன்னுடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் அயன். ஆனால், அந்த நன்றியை சூர்யா மறந்துவிட்டாரே என கடுமையான விமர்சனமும் எழுந்தது. ஆனால், இதுமட்டுமின்றி சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த மாற்றான் படத்தில் மாபெரும் தோல்விக்கு காரணமே சூர்யாதான் என்றும், அவரும் தயாரிப்பாளரும் சேர்ந்து, மாற்றான் படத்தின் இயக்குநர் கே.வி ஆனந்துக்கு தெரியாமல் செய்த வேலையே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

   

Surya

 

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மாற்றான் படத்தின் நீளம் மிக அதிகமாக உள்ளது, அதை குறைக்க வேண்டும் என்று படத்தின் நாயகன் சூர்யாவும் தயாரிப்பாளரும் கேவி ஆனந்திடம் கூறியுள்ளனர். படம் மிக கச்சிதமாக, தேவையான காட்சிகளுடன் வந்துள்ளது. இதில் நீளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் படத்தின் முதல் ரப் காப்பியை பார்த்துவிட்டு, தேவையில்லாத பகுதிகள் இருந்தால் நீக்கி விடலாம் என்று கே.வி ஆனந்த் கூறியிருக்கிறார்.

இவர் சொல்வதை பார்த்தால், நிச்சயமாக நீளத்தை குறைக்க மாட்டார் என பேசிக்கொண்ட அவர்கள் இருவரும், கே.வி ஆனந்துக்கு தெரியாமல் எடிட்டிங் டேபிளில் அமர்ந்து, படத்தில் பல ஆயிரம் அடிகளை நீக்கி விட்டனர். பிறகு இதையறிந்த கேவி ஆனந்த் ஒரு படைப்பாளியாக மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அந்த விஷயம்தான் இருவருக்கும் மனஸ்தாபம் வர காரணமாக இருந்தது என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.