விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார். நடிகை வனிதா தனது மகளுக்கு ஆதரவாக தனது இணையதள பக்கங்களிலும் பேட்டிகளிலும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார் .
அதோடு மட்டுமின்றி இவர் பல சேனல்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை வனிதா ‘தன்னை பலமாக யாரோ அடித்ததாகவும், அவர் ‘ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதாகவும், எனவே அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தான் எனவும் கூறி அடிபட்ட காயத்துடன், புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி படுவைரலானது.
இதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ Clarification: I really don’t have anything against any of my contestants or anyone. I speak like this with them. I’m not aware of what happened to you, but I feel sorry for you. Take rest. Jovika is smart, she can win it by herself, she doesn’t need your help’ என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டது.
Vanitha akka talked about her conversation with #PradeepAntony#BiggBoss7 #BiggBoss #BiggBoss7Tamil #BiggBossTamil#BiggBossTamil7 #BiggBossTamilSeason7pic.twitter.com/RkdXo3VHu7
— Sekar ???? (@itzSekar) November 28, 2023
இந்நிலையில் மீண்டும் தனது பிக் பாஸ் குறித்த தனது பேட்டியை நேற்று தொடங்கிய வனிதா, அதில் நடந்த உண்மைகளை கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பிரதீப்பிடம் தான் மெசேஜ் செய்தது குறித்தும், பதிலுக்கு அவர் பேசியது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘தான் யாரையும் Blame செய்யவில்லை என்றும், பிரதீப் ஜோவிகா பற்றி பேசிய போதுதான் எனக்கு கோபமே வந்தது. நான் இதை ஒன்னும் ப்ரோமோஷன்-காக பண்ணல’ என்றும் காட்டமாக பேசியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…