மனைவியின் போன் கால்ஸ்… அடுத்தடுத்து அதிர்ச்சி… கல்யாணமான சில நாட்களிலேயே… டெலிவரி பாய் எடுத்த கொடூர முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 2, 2026

Spread the love

நொய்டாவில் 25 வயதான விநியோக ஊழியர் அஜய் சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் சிங் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நீதிமன்ற திருமணம் செய்து கொண்ட நிலையில், குறுகிய காலத்திலேயே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு முன்பாக அஜய் தனது மனைவி மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். மனைவியின் அலைபேசி அழைப்பு விவரங்களைச் சோதித்தபோது, அவர் பல ஆண்களுடன் பேசி வந்தது தெரியவந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் பலமுறை எடுத்துக்கூறி நிலைமையைச் சரிசெய்ய முயன்றும், அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

https://twitter.com/priyarajputlive/status/2105570950238654787/video/1

   

மனைவியின் நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளான அஜய், இறுதியில் இந்த தீவிர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய்யின் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்தும், மனைவியின் பின்னணி குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.