இமயமலையின் கடும் குளிரிலும் உறைபனியிலும் தனது உரிமையாளரின் உடலைப் பிரியாமல் நான்கு நாட்கள் காவல் காத்த நாயின் நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. சம்பா பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பியூஷ் குமார் மற்றும் அவரது உறவினர் விக்ஸித் ராணா ஆகியோர் கடந்த ஜனவரி 23 அன்று மலையேற்றத்தின் போது மாயமானார்கள். பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை மற்றும் முழங்கால் அளவு பனிப்பொழிவுக்கு இடையே, பியூஷின் வளர்ப்பு நாய் அவனது உடலுக்கு அருகிலேயே விசுவாசத்துடன் தங்கியிருந்தது.
Man 💔In freezing snow, this dog stood guard beside his owner’s body for 4 days.
After Army helicopters spotted the bodies of two boys, the dog was finally rescued.
No doubt, the bond between humans and dogs is beyond words. This footage when the team reached📍Chamba https://t.co/zWRbkpEBN9 pic.twitter.com/L3WQyuvXhD
— Nikhil saini (@iNikhilsaini) January 26, 2026
உணவோ, போதிய வெப்பமோ இல்லாத நிலையிலும் நான்கு நாட்களாக அந்த நாய் அங்கிருந்து நகர மறுத்துவிட்டது. இறுதியாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, கடும் பசியால் சோர்வடைந்திருந்த நிலையிலும் அந்த நாய் தனது இளம் உரிமையாளரின் உடலைப் பாதுகாத்தபடி நின்றிருந்தது. மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்றபோது, மரணத்தைக் கடந்த அந்த விசுவாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயினர். தற்போது அந்த நாய் மீட்கப்பட்டு உரியப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
