“டேய் தம்பி சும்மா இரு என்னை சீண்டாத” மீண்டும் மீண்டும் வம்புக்கிழுத்த நாய்.. தும்பிக்கையால் ஓங்கி அடித்த யானை… தலைதெறிக்க ஓடிய வைரல் வீடியோ…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 14 வினாடி வீடியோ ஒன்றில், சாலையில் கடந்து செல்லும் யானையைப் பார்த்து நாய் ஒன்று விடாமல் சத்தமாகக் குரைத்துக்கொண்டிருக்கிறது. நாயின் இந்தச் செயல் யானையை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. முதலில் தனது பின்னங்காலைத் தூக்கி நாயை எட்டி உதைக்க யானை முயல்கிறது, ஆனால் நாய் அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிவிடுகிறது.

 

View this post on Instagram

 

   

A post shared by Lek Chailert (@lek_chailert)

இதனால் மேலும் ஆத்திரமடைந்த யானை, சட்டென்று திரும்பித் தனது தும்பிக்கையை வேகமாகச் சுழற்றி நாயை அடிக்கப் பாய்கிறது. யானையின் தும்பிக்கை அடியிலிருந்து நாய் தனது சுறுசுறுப்பால் மயிரிழையில் தப்பினாலும், யானையின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்துபோய் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகிறது.