தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையின் வேகம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
