“அய்யய்யோ… OT-ல இருக்குற டூல் பேரே தெரியாதா?… கூகுளை தேடிய டாக்டர்… அதிகாரியை அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்…!”

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி தயாகர் ராவ், பெடனா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருத்துவ உபகரணத்தைக் காட்டி, அதன் பெயர் என்னவென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டார்.

அந்த உபகரணத்தின் பெயர் உடனடியாகத் தெரியாததால், அந்த மருத்துவர் தன் பாக்கெட்டிலிருந்து மொபைல் போனை எடுத்து உடனடியாக கூகுளில் தேடத் தொடங்கினார். கூகுளில் தேடியும் சரியான பதில் கிடைக்காததால், மாவட்ட அதிகாரி மருத்துவரின் இந்த அலட்சியமான செயலால் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

   

https://twitter.com/greatandhranews/status/2087448487705378845/video/1

   

அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் அடிப்படை மருத்துவ உபகரணத்தைக் கூட அடையாளம் காணத் தெரியாமல் மருத்துவர் திணறிய நிகழ்வு மருத்துவ உலகிலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி, கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.