ஆட்டோவில் அலறிய பெண்…. CCTV-யில் சிக்கிய அந்த 1 செகண்ட்… வெளிவந்த பகீர் உண்மை… கணவன் செய்த உச்சக்கட்ட கொடூரம்….!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரைச் சேர்ந்த வைதேகி (34) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகக் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டதாக முதற்கட்டமாக அப்பகுதியில் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

கொலையாளிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும், அதில் பதிவான ஆட்டோவின் பதிவு எண்ணையும் வைத்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் வழக்கில் யாருமே எதிர்பாராத அதிரடித் திருப்பம் ஏற்பட்டது. வைதேகியைக் கொலை செய்தது மர்ம நபர்கள் எவரும் அல்ல; சந்தேகத்தின் பேரில் அவரோடு தகராறில் ஈடுபட்டு வந்த அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநருமான சின்னா (36) என்பவரேதான் என்பது அம்பலமானது.

   

மனைவியின் நடத்தை மீது எழுந்த சந்தேகத்தால், சம்பவத்தன்று அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று வழியில் தகராறு செய்த சின்னா, ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் இச்சம்பவத்தை மர்ம கும்பல் செய்த கொலையாகச் சித்தரித்துவிட்டுத் தப்பிச் சென்ற சின்னாவை, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.