சீனாவின் ஷான்க்சி மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் ‘லி’ என்பவருக்கு ஏற்பட்ட பல் வலி சிகிச்சை, வடிவேலு பட காமெடி பாணியில் விபரீதமாக முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “காலையில் டென்டல் இம்ப்ளான்ட் செய்து கொண்டால், மதியமே கறி சாப்பிடலாம்” மற்றும் “100 வயதானாலும் உறுதியான பற்கள் இருக்கும்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அந்த மருத்துவமனைக்கு லி சென்றுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இலவச பரிசோதனை செய்வதாகக் கூறி, காரை அனுப்பி வரவழைத்துள்ளது.
ஆனால், பரிசோதனைக்குச் சென்ற முதியவருக்குப் பேரதிர்ச்சியாக, நன்றாக இருந்த 12 பற்களை அந்தப் பல் மருத்துவர் அதிரடியாகப் பிடுங்கி எடுத்துள்ளார். அதற்குப் பதிலாக 10 செயற்கைப் பற்களைப் பொருத்திவிட்டு, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹2.6 லட்சம் (18,800 யுவான்) கட்டணமாக வசூலித்துள்ளனர். அதுமட்டுமின்றி, கூடுதலாக ₹87,000 செலுத்தப்படாத கட்டணமும் உள்ளதாகக் கூறி அவருடைய வங்கிச் சேமிப்பை முழுமையாகக் காலி செய்துள்ளனர். சிகிச்சை முடிந்து வெளியே வந்த முதியவர், வாய் முழுவதும் ரத்தத்துடன், பேருந்துக்குக் கூட வெறும் ₹420 மட்டுமே கையில் எஞ்சியிருந்ததாகத் தன் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
முதியவர் லிக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், இதயப் பிரச்சனை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிர உடல்நலக் கோளாறுகள் இருந்ததை அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகே இம்ப்ளான்ட் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். போதிய மருத்துவ எச்சரிக்கை மற்றும் பரிசோதனைகள் இன்றி, பண ஆசைக்காக முதியவரின் 12 பற்களைப் பிடுங்கிய இந்தச் சீன மருத்துவமனையின் செயல் சர்வதேச அளவில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…