விஜய்க்கு ஷாக்…! Gen Z வாக்காளர்களை குறிவைக்கும் திமுக…. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நீக்கப்பட்டவர்களில் திமுக ஆதரவாளர்கள் யாராவது விடுபட்டுள்ளனரா என்பதை வாக்குச்சாவடி வாரியாக நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லி படையெடுப்புகளுக்கு அஞ்சாமல், தேர்தல் பணிகளில் தொய்வின்றி செயல்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

   

குறிப்பாக, Gen Z எனப்படும் புதிய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுக தனது உத்திகளை வகுத்து வருகிறது. இதுவரை சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தவெக பக்கம் ஆர்வம் காட்டி வரும் இளம் வாக்காளர்களைத் திமுக பக்கம் ஈர்ப்பதே தற்போதைய முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   

இதற்காக இளைஞரணி மாநாடுகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திமுகவின் இந்தத் திடீர் வியூகம், இளைஞர் பட்டாளத்தை நம்பியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும் சவாலாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.