முதல் பயணமே மகனுடன் தான்…! விமானியான தந்தை செய்த க்யூட் செயல்… நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

தனது முதல் விமானப் பயணத்தைத் தொடங்கும் விமானி ஒருவர், தனது அன்பு மகனுடன் இருக்கும் நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகாஷ் கன்னா என்ற அந்த விமானி, தனது முதல் பணிப் பயணத்தின் போது மகன் அகஸ்தியாவை உடன் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடியுள்ளார். தந்தையைப் போலவே சிறுவன் அகஸ்தியாவும் விமானி உடையணிந்து வலம் வரும் காட்சிகள் பார்ப்பவர்களைக் கவர்ந்துள்ளன.

குஞ்சன் ஆப்தே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. தந்தையின் சாதனையையும், மகனின் கியூட்டான தோற்றத்தையும் பார்த்த இணையவாசிகள் “வருங்கால விமானி”, “பெருமையான நிமிடம்” எனப் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.