“ஐயா..! எங்களை கொடுமைப்படுத்துறாரு….” அடுக்கடுக்கான புகார்கள்… வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 15, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி மையத்தில், விடுதி வார்டன்கள் தங்களைப் துன்புறுத்துவதாக மாணவர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கு தொழிற்பயிற்சி பயிலும் திருவண்ணாமலையைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்ற மாணவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், விடுதி வார்டன் திருமுருகன், மாணவர்களுக்கான உணவில் பெரும்பாலான பங்கைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாகவும் குறிப்பாக சிக்கன், பிரியாணி போன்றவற்றை,  நன்கொடைப் பொருட்களையும் அபகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால், வார்டன் தகாத வார்த்தைகளால் பேசி, அடிக்க வருவதுடன் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபடுவதாககூறியுள்ளார்.

   

மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது என்று கூறி, வார்டனை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய முதலமைச்சரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்துப் பள்ளி முதல்வரிடம் கேட்டபோது, மாணவனின் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். மேலும், வார்டன் திருமுருகன் ஒரு மாற்றுத்திறனாளி என்றும், அவரை மாற்ற ஒரு சதி நடப்பதாகவும் கூறிய அவர், வீடியோ குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.