தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம்(40) ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் போது போடி பகுதி நடுநிலைப் பள்ளியில் இப்போது பணியாற்றும் ஒரு பெண் ஆசிரியருடன் நட்பு ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமான அந்தப் பெண்ணை மாரிச்செல்வம் தவறாகப் பயன்படுத்தி செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார். அவ்வப்போது வீட்டுக்குச் சென்றும் சீண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த பெண் நட்பை முறித்துக்கொண்டார்.
ஆனால் மாரிச்செல்வம் அவதூறு பரப்புவேன் என மிரட்டியதால் மனமுடைந்த பெண் உயிரை மாய்க்க முயன்றார். பின்னர் துணிச்சலுடன் அக்டோபர் 10ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார். சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி நவம்பர் 3ஆம் தேதி மாரிச்செல்வம் மீது வழக்கு பதிந்தனர். இன்று அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
