எம்ஜிஆரை பார்த்து பயந்த இயக்குனர்… படத்தை பாதியிலேயே விட்டுட்டு கிளம்பிட்டாராம்..!

By Soundarya on கார்த்திகை 20, 2024

Spread the love

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர்.இவர் மறைந்தாலும் இவரின் புகழ் என்றும் மறையவில்லை.

Madurai Veeran

   

இப்படி பல புகழுக்குரிய எம்ஜிஆரின் பழைய விஷயங்கள் வைரலாகி வருகிறது. ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும். 1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார்.

   

தமிழ் சினிமாவில் முதல் 'ஒரு கோடி' வசூல் திரைப்படம்!.. வசூல் மன்னனாக கலக்கிய  எம்.ஜி.ஆர்… - CineReporters

 

பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன்.  இந்த படத்தை இயக்கியவர் தான் டி.ஆர் ரகுநாத். இவர் படத்தில் எம்ஜிஆர் ஆரம்பகட்டத்தில் நடித்து வந்துள்ளார். இதனால் அவர் எம்ஜிஆரை வாடா போடா என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. ஒருநாள் படப்பிடிப்பில் எம்ஜிஆரை டி.ஆர் ரகுநாத் வாடா என்று கூப்பிட அதை பார்த்த எம்ஜிஆரின் ரசிகர் யாரு அது உங்களை வாடான்னு கூபிடுத்தாரு. அவர் வெளியே வரட்டும் கல்லால் அடிப்பேன் என்று சொல்ல, எம்ஜிஆர் அயோ அவர் என்னுடைய இயக்குனர், நண்பரும் கூட அப்படி எதுவும் பண்ணிடாதீங்க அப்படின்னு சொன்னாராம். பிறகு இயக்குனரிடம் போய் எம்ஜிஆர் இனி அப்படி கூப்பிடாதீங்க என் ரசிகர்கள் கோபப்படுறாங்கன்னு சொன்னாராம்.

MG Ramachandran Birth Anniversary: Must Watch MGR Films | முன்னாள் முதல்வர்  எம்ஜிஆர் பிறந்தநாள்: மனங்களை விட்டு விலகாத 'மக்கள் திலகம்' | Tamil Nadu  News in Tamil

அதனால் தனிப்பட்ட முறையில் அப்படி கூப்பிடுங்க. பொதுவெளியில் கூப்பிடாதீங்கன்னு சொன்னாராம். இதை ஏற்றுக்கொண்ட ரகுநாத் மறுநாள் ஷூட்டிங்கில் வாய் தவறி வாடா என்று கூப்பிட்டாராம். இதனால் அவனுடைய நிலை மாறிவிட்டது ஆனால் என்னுடைய பழக்கம் மாறவில்லை. அதனால் நான் இந்த படத்திலிருந்து விளக்குகிறேன் என்று விலகிவிட்டாராம்.  அதன்பின்னர் அந்த படத்தை லோகநாதன் இயக்கினாராம்.