Whatsapp

Whatsapp கால்களை Record செய்ய விரும்புகிறீர்களா…? எளிய வழிமுறைகள் இதோ…

By admin on கார்த்திகை 20, 2024

Spread the love

Whatsapp அனைவரும் அத்தியாவசமாக பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி ஆகும். உலகத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக Whatsapp உபயோகிக்க கூடியவர்களாக தான் இருப்பார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பயனாளர்களை Whatsapp கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நிலவரப்படி 535 பில்லியன் பயனர்களுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான Whatsapp பயனர்களை இந்தியா கொண்டுள்ளது.

   

கிட்டத்தட்ட 99 சதவீதம் மொபைல் பயனர்களால் இந்த வாட்ஸாப்ப் பயன்படுத்தப்படுகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் வாட்ஸ்அப் தான் பிரதான மெசேஜ் செயலியாக செயல்படுகிறது. இது வேகமாக செயல்படுவதால் மக்களிடையே பிரபலமாகவும் இருக்கிறது. நம் அன்புக்குரியவர்களிடம் இடையேயிலான தொலைவைக் குறைத்து தொடர்பில் இருக்க இது உதவுகிறது. இந்த Whatsapp 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

   

தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே Whatsapp ஒவ்வொரு அம்சங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். என்னதான் வாட்ஸ்அப்பில் பல அம்சங்கள் இருந்தாலும் இதில் இல்லாத ஒரு அம்சம் என்னவென்றால் அது கால் ரெக்கார்டிங் தான். சாதாரண கால்களைப் போலவே வாட்ஸ் ஆப்பிலும் கால் செய்து பேசலாம். ஆனால் அவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி Whatsapp கால்களை ரெக்கார்ட் செய்ய இயலும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

 

கியூப் ஏசிஆர் ( Cube ACR) என்ற கால் ரெக்கார்டிங் ஆப் மூலம் Whatsapp அழைப்புகளையும் மற்ற தளங்களில் உள்ள அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்ய முடியும். சேல்ஸ் டிரையல் (SalesTrail) பிரீமியம் கால் ரெக்கார்டிங் ஆப் ஆன இதன் மூலமும் Whatsapp கால்களை ரெக்கார்ட் செய்ய இயலும். இது நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏ சி ஆர் கால் ரெக்கார்டர் (ACR call Recorder ) Whatsapp கால்களை ரெக்கார்ட் செய்ய இதுதான் பல பயனர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப் பயனர்களுக்கு எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்புகளின் உதவியுடன் Whatsapp கால்களை உங்களால் எளிமையாக ரெக்கார்ட் செய்ய இயலும்.