நான் அப்படி செய்யணுமா…? படவாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட இயக்குனர்… பிரபல சீரியல் நடிகையின் பகீர் பேட்டி…

By Begam on ஐப்பசி 31, 2023

Spread the love

சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘கண்ணானே கண்ணே’  சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்  நடிகை நிமேஷிகா கிருஷ்ணன். இவரின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் குண்டூர்.ஆனால் வளர்ந்தது எல்லாம் நம்ம கோயம்புத்தூரில் தான். பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர், கோவையில் உள்ள லோக்கல் சேனலில் காம்பியராக இருந்துள்ளார்.

   

டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலாம்பரி என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோல் என்றாலும் சிறப்பாக நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த தொடர் பாதியில் முடிந்தது.

   

 

 

அதன்பிறகு மலையாளத்தில் அனுராகம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். .நன்றாக சென்றுகொண்டிருந்த அந்த தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டது. அதன்பிறகுதான் சன்டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை நிமேஷிகா. தற்பொழுது இவர் திடீரென்று அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அதாவது இதுபற்றி அவர் கூறும்பொழுது, ” சீரியல் பக்கம் காஸ்டிங் கவுச் இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் சினிமா மற்றும் வெப் சீரிஸ் உலகில் காஸ்டிங் கவுச் உள்ளது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என முதலில் கூறியபோது எனக்கு புரியவில்லை. பின்னர் இதை பற்றி உங்கள் நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என சூசகமாக சொல்லிவிட்டார்கள்.நான் என் நண்பர்களிடம் காஸ்டிங் கவுச் என்றால் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டபின்னர், அந்த சந்தர்ப்பத்திற்காக நான் அப்படி செய்ய வேண்டுமா? என அதிர்ச்சியடைந்தேன். பின்னர் அந்த வாய்ப்பே வேண்டாம் என கூறிவிட்டேன்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.