இப்படி மாறிட்டாங்களே… உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை வரலக்ஷ்மி… லேட்டஸ்ட் பிக்ஸ்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கியவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் திரையுலகில்  ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.

   

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். குண்டாக இருந்த நடிகை வரலக்ஷ்மி தற்பொழுது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாக சிக்கென்று மாறியுள்ளார்.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது டைட்டான ஜிம் ட்ரெஸ்ஸில் ஸ்லிம் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது? என ஆச்சரியத்தில் உள்ளனர்.